தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்களை தமிழக அரசு நியமனம் செய்ய மாபெறும் ஆர்ப்பாட்டம்


சென்னை, செப்டம்பர் 08, 2021: தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் இன்று மாநில பொதுச்செயலாளர் வே.காசிநாததுறை தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அவருடன் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Youtube Video👇👇

அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு கல்லூரிகளுக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் யோகா ஆசிரியர்களை நிரந்தரமாக பணியாற்ற அரசு ஆணை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் சுகாதாரத்துறை, போக்குவரத்துறை, காவல்துறைகளில் மற்றும் விளையாட்டுதுறையில் யோகா ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், கல்வித்துறை மூலம் நடத்தப்படும் யோகாசன போட்டிகளை முறையாக நடைமுறைப்படுத்தி மேலும் கல்வி பயின்றவர்களை மட்டும் போட்டி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ அரசு கல்வி துறையின் மூலமாக ஒலிம்பியா யோகா போட்டியை முறையாக அனைத்து மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்தி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

SGFI யோகாசன போட்டியில் அனைத்து மாவட்டத்தில் உள்ள கல்வித் துறைக்கும் தெரியப்படுத்தி இப்போட்டியை முறையாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தோன்றிய யோகா கலைகயை பிற மாநிலங்களுக்கும் சென்றாலும் தமிழகத்தில் அரசு யோகா கலைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.)

சென்ற ஆட்சியில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது இந்த ஆட்சியில் எங்களுக்கு யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு யோக ஆசிரியர் பணி நியமனம் செய்ய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்.

எங்களுக்கு எப்பொழுது தமிழக அரசு யோக ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்குகிறதோ அன்றுதான் எங்களுக்கு யோகா தினம், மேலும் தமிழக முதல்வர் அவர்கள் யோக ஆசிரியர்கள் நியமித்தால் அந்த நாளை யோகா கலையை உலகிற்கு வெளிக்கொண்டு வந்த யோக கலையால் உடல், உள்ளம். மனம் அனைத்திற்கும் நெறிபடுத்திய பதஞ்சலியார் தினமாக தமிழ்நாட்டில் யோக ஆசிரியர்கள் கடைப்பிடிப்பார்கள், தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழகத்திலுள்ள அனைத்து யோக ஆசிரியர்கள் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு
மாநில பொதுச் செயலாளர்
வே.காசிநாததுரை

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care