1990 வருட வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் பள்ளி முன்னாள் மாணவர்களின் கோலாகலமான சந்திப்பு

டிசம்பர் 29, 2024 சென்னை: 1990 வருட வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் கோலாகலமான சந்திப்பு இன்று வேளச்சேரி கிராண்ட் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. இது ஏழாவது வருட சந்திப்பாகும். முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இ ந்தக் குழுவின் தலைவர்கள் ஜஸ்டின் மற்றும் பால்ராஜ் பேசுகையில், எந்த ஒரு குடும்பத்திலும் நடைபெறும் நல்ல மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உதவிகளை பரி மாற்றிக் கொள்வதாக கூறினார்கள். Youtube Video link 👇 இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி தங்கள் சந்தோஷத்தை கொண்டாடினர். சில விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர்கள் தங்கள் திறமைகளை கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்நிகழ்வு மதிய உணவுடன் மகிழ்ச்சியாக முடிவுற்றது ****