Posts

Showing posts from June 30, 2021

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சேத்துப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்புநிலையத்தில் ஆய்வு

Image
சென்னை, ஜுன் 29, 2021: சென்னையில் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக அலுவலகத்தில் இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நடந்து வரும் புனரமைப்பு பணிகளை நேரில்  ஆய்வு செய்தார். Video👇👇 பின்பு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் மேயர் ராமநாதன் சாலையில்  அமைக்கப்பட்டுள்ள 1 MLD திறன்கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.  இதன் மூலம் அப்பகுதியில் தேங்கும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மாநகர பூங்காகளுக்கு நல்ல நீர் வழங்க இருப்பதாக கூறினார். அவருடன் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் அதிகாரிகள் உடன் இருந்தனர். ****