"திராவிட ஒழிப்பு மாநாடு"- தமிழர் குடிகள் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 05 அன்று மதுரையில் நடைபெறும்
சென்னை: தமிழர் குடிகள் கூட்டமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளர் கு.செந்தில்மள்ளர் இன்று பத்திரிக்யாளர்கள் சந்திப்பில் "திராவிட ஒழிப்பு மாநாடு" நவம்பர் 05 அன்று மதுரையில் நடைபெறும் என்று அறிவித்தார். Press meet youtube video link 👇 மேலும் அவர் கூறியதாவது. கடந்த 2023 ஆகத்து 29 சென்னையில் நடைபெற இருந்த திராவிட ஒழிப்பு மாநாட்டினை திராவிடர்களின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் தடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தோம். சென்னையில் நவம்பர் 01 இல் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மழைக்காலம் என்பதால் இடமும் தேதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 05 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும். அதற்கான அனைத்து வகையான பணிகளும் செயலாக்கம் பெற்று வருகின்றன. இந்த முன்னெடுப்பையும் திராவிடர்கள் காவல்துறை கொண்டு தடுக்க முயற்சிக்கலாம். அவைகளை சட்டத்தின் துணை கொண்டு முறியடித்து மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். எது கேடு என்று கருதினாலும் ...