தமிழ்நாடு குவாரிகளில் நடக்கும் ஊழலை எதிர்த்து Dec 27 & Jan 27ல் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: அனைத்து எம். சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு
சென்னை, டிசம்பர் 13, 2021: தமிழ்நாடு குவாரிகளில் நடக்கும் ஊழலை எதிர்த்து Dec 27 & Jan 27ல் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அனைத்து எம். சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் S.யுவராஜ் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். அவருடன் காஞ்சி S.தீனன், தலைவர், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம், IKS நாராயணன், தலைவர், தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி நல சங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். Youtube Video👇👇 அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 50 சதவீதம் கட்டுமான தொழில்கள் நடைபெறுகின்றன. இதை பயன்படுத்தி சில தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் விதிகளை மீறி கனிமவளங்களை (மலைகள்) உடைத்தும் அழித்தும் கருங்கல் ஜல்லி, M.Sand உற்பத்தி செய்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு தெரியாமல் பல மலைகள் காணாமல் போகின்றன. தனியார் கல்குவாரிகள் அரசு நிர்ணயித்த ஹெக்டர் அளவைக் காட்டிலும் 300 அடி ஆழத்தில் பாறைகள் உடைக்கப்படுகின்றன. சென்னைக்கு அருகிலிருக்கும் திரிசூலம்...