தமிழக அரசு அறிவித்த புதிய பாலினம்; இடைலிங்க (Intersex) மனிதர்களின் குரல் !!!

தமிழகத்தில் முதல் நபராக இடையினம் என அடையாள அட்டை பெற்றுள்ளார் எஸ் ஆர் சக்கரவர்த்தி தமிழக அரசு இதுவரை திருநர் சமூகத்திற்கு திருநங்கை திருநம்பி என அடையாள அட்டை வழங்கி வந்த நிலையில் இப்போது இடையினம் என ஒரு பாலினத்தை அறிவித்து அடையாள அட்டை வழங்கியுள்ளது . சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தா அலுவலகம் தமிழ்நாடு அரவாணிகள் அசோசியேஷன் மூலமாக இந்த அடையாள அட்டையை பெற்றுள்ளார் சக்கரவர்த்தி. (3rd from left) எஸ் ஆர் சக்கரவர்த்தி (எஸ் ஆர் சி) எஸ் ஆர் சக்கரவர்த்தி (எஸ் ஆர் சி) தொகுப்பாளர், நடிகர், மக்கள் பணியாளர் என பன்முகத்தன்மை கொண்ட சக்கரவர்த்தி சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல், சந்திரலேகா, ரோஜா, போன்ற 25க்கும் மேற்பட்ட சீரியல்கள், 2000 ஆயிரம் நிகழ்ச்சிகள் 22 ஆண்டுகளாக தொகுப்பாளராக நிறைய தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். இதைத் தாண்டி அவர் வாழ்வு நிறைய கற்களும் முற்களும் வலிகளும் நிறைந்ததாகும். ஆண் பெண் திருநங்கை மட்டுமே நான் கேள்விப்பட்டிருப்போம் அதைத் தாண்டி இவ்வுலகில் intersex இடைலிங்க பாலின மக்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்!!! இதை ஊடு பாலினம் என்றும் கூறுவார்கள் . ஆம...