Posts

Showing posts from September 22, 2021

அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி கண்டனம்: ஈஞ்சம்பாக்கம் 196வது வட்டம் பெத்தேல் நகரை திமுக அரசு காலிசெய்வதற்கு எதிர்ப்பு

Image
சென்னை, செப்டம்பர் 22, 2021: ஈஞ்சம்பாக்கம் 196வது வட்டத்துக்கு உட்பட்ட  பெத்தேல் நகர் பகுதியை அப்புறப்படுத்த திமுக முயற்சி செய்து வருகிறது . இந்த பகுதி மக்களை காப்பாற்றுவதற்காக வாக்குறுதிகள் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றி ஓட்டு வங்கியை வாங்கிய திமுக அரசு இன்று அதே மக்களை அப்புறப்படுத்த அரசு அதிகாரியை அனுப்பி மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. Youtube Video👇👇 இதை எதிர்த்து அந்த பகுதி மக்கள் இன்று காலை 10 மணியளவில் ரோடு மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.  அதில் அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி கலந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 2500 குடும்பங்கள் உள்ளன. திமுக அரசு தேர்தலுக்கு முன்பு அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நகரை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்க தக்க விஷயம். அதனால் தமிழக அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் மற்ற பிரமுகர்கள் அந்த பகுதி ம...