டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சென்னை, செப்டம்பர் 09, 2021: டெல்லியில் கடந்த வாரம் சபியா என்கிற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Youtube Video👇👇
வட சென்னை மாவட்ட தலைவர் M.A. சாகுல் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் இ. முகம்மது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல்துறையில் பணியாற்றிய பெண் காவலருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கும் மேலும் இந்திய நாட்டில் வாசிக்கக் கூடிய பெண்கள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான இப்பெண் காவலரின் உடலை 50க்கும் மேற்பட்ட இடங்களில் மனித மிருகங்கள் சிதைத்து கற்பழித்து படுகொலை செய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் செய்தி ஊடகங்களில் வெளிவராமல் அரசும் மூடி மறைக்கும் வேலையை செய்திருக்கிறது. டெல்லியின் பாதுகாப்புத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற போதும் இந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்து தண்டிக்கப்படாமல் இருப்பது ஒன்றிய அரசு பெண்களை பாதுகாப்பதிலிருந்து தவறிவிட்டது என குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் தென் சென்னை மாவட்ட தலைவர் ஹபீபுல்லா பாஷா வடசென்னை மாவட்ட செயலாளர் பெரோஸ் கான் தென் சென்னை மாவட்ட செயலாளர் பயாஸ் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
****