Posts

Showing posts from June 12, 2021

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இளம் தமிழக வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் தகுதி பெற்றுள்ளார்

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 20 வயது இளம் ஹாக்கி வீரரான மாரீஸ்வரன் சக்திவேல் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஹாக்கி பயிற்சி பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற மாரீஸ்வரனுக்கு,  தேவையான விளையாட்டு உபகரணங்களை, கனிமொழி எம்.பி. அவர்கள் வழங்கி , பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைத்தார். Video👇👇 இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவிருக்கும் FIH ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி க்கான, இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு மாரீஸ்வரன் சக்திவேல் தேர்வாகியுள்ளார். நாளை தொடங்கவுள்ள இந்திய அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ள மாரீஸ்வரன் சக்திவேல், இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்.பி . அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சாதனை புரிந்த மாரீஸ்வரன் சக்திவேலுக்கு, ஏ...

Brotherhood Missions & Ammachi Street Kitchen Distributes Covid Provisions Relief At Guindy

Image
சென்னை, ஜூன் 11, 2021: கொரோனோ ஊரடங்கில்  வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2020ம் ஆண்டில் இருந்து சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் உணவின்றி தவிக்கும் மக்களும் உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருக்கிறார்கள். Video : அதன் ஒரு தொடர்ச்சியாக  இன்று சென்னை  ஈக்காட்டுதாங்கள் அம்பேத்கார் நகரில் உள்ள  300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு  மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார்  வழங்கினார். பொதுமக்கள் சமூக இடைவெளி பின் பற்றி வாங்கி சென்றனர்.  இவர்களுடன் மற்ற தொண்டு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். ****