திரிபுராவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில் TNTJ சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை, நவம்பர் 01, 2021: திரிபுராவில் விஷ்வ இந்து பரிசத் திட்டமிட்டு கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக வட சென்னை மாவட்ட தலைவர் MA. சாகுல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. ஆர் அப்துல் கரீம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். YouTube Video👇👇 அவர் கூறியதாவது பாஜக அரசு இந்தியாவில் பொறுப்பேற்றதில் இருந்து சிறுபான்மையினராக இருக்கக் கூடிய முஸ்லிம்கள் அதிகம் தாக்கப்படுவது என்றும், முஸ்லிம்கள் படுகொலைகள் செய்யப்படுவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது என்றும், பிரதமர் மோடி சர்வாதிகார முறையில் தேசத்தை கொண்டு செல்கிறார் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களின் மத சுதந்திரம் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு பேரணி என்ற பெயரில் வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் திட்டமிட்டு சென்று, முஸ்ல...