Posts

Showing posts from May 27, 2022

இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை சொல்லி உலக சாதனை படைத்த 5 வயது சிறுமி ரஷ்மி

Image
சென்னை, மே 27, 2022: செங்கல்பட்டு  பகுதியை சேர்ந்த  ரமேஷ் - சோபனா ஆகியோர் மகள் ரஷ்மி என்கிற 5 வயது சிறுமி உலக சாதனை  படைத்துள்ளார். Youtube Video👇 சென்னை குரோம்பேட்டையில் உள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை 1 நிமிடத்தில் 60 நாட்டு நாய்களின் பெயரினை சொல்லி புதிய உலக சாதனை படைத்தார் .  (L to R) ரமேஷ் (சிறுமியின் தந்தை);  லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல்; சிறுமி ரஷ்மி;  நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி;  ஷோபனா   (சிறுமியின் தாய்) இந்த சாதனையினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அங்கிகரித்து சான்றிதழ்  வழங்கினார். நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி பதக்கம் அணிவித்தார், சாலமன்,  தினேஷ் ஹரிஹரன் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். ****