UBER, OLA, RAPIDO, PORTER, NAMMAYATRI நிறுவனங்களை முறைப்படுத்த உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் வலியுறுத்தல்
.jpg)
சென்னை, அக்டோபர் 25, 2024: தமிழகத்தில் செயலி வடிவில் இயங்கி வரும் UBER, OLA, RAPIDO, PORTER, NAMMAYATRI போன்ற நிறுவனங்களை முறைப்படுத்த போக்குவரத்து துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகப் போக்குவரத்து (RTO) துறையில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்தும் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹூர் ஹூசைன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் மாநில தலைவர் சுரேந்திர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசியதாவது: கடந்த 2023 ஏப்ரல் போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை உரிமை குரல் ஓட்டுநர் சங்கம் அறிவித்தது. அந்த செய்தியை அறிந்த போக்குவரத்து துறை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் அன்றைய போக்குவரத்து துறை ஆணையர் உயர்திரு நிர்மல் ராஜ் IAS அவர்களுடன் எங்களை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வெகுவிரைவில் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். அதனை தொடர்ந்து அந்த முற்றுகை போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றோம். ஆ...