ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடாகா நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
சென்னை, மார்ச் 15, 2022: அரசியல் சாசனத்தையும் இஸ்லாத்தில் உள்ளதையும் புறந்தள்ளிவிட்டு மனம் போன போக்கில் வழங்கப்பட்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் (அநியாய) தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. Youtube Video👇👇 அப்போது அவர் கூறியதாவது: ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடாகா நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. உலகஅளவில் பரப்பாகப் பேசப்பட்ட ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை கர்நாடாகா உயர்நீதிமன்றம் இன்று (15.03.2022) வெளியிட்டது. ஏற்கனவே எரிந்து நாசமாகி வரும் இந்தியாவின் மதச்சார்பின்மை மீது ஒரு கேலன் பெட்ரோலை ஊற்றியிருக்கிறது கர்நாடாகா உயர்நீதிமன்றம். ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை எனவும் எனவே ஹிஜாபை முஸ்லிம்களின் அடிப்படை உரிமை என எடுத்துக் கொள்ள முடியாது எனவும் இதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் எனவும் விஷம் கக்கியிருப்பதுடன் ஹிஜாபுக்கு ஆதரவாக தொடுக்கப்பட்ட சுமார் 140 ரிட் மனுக்களைய...