அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் 275 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா

சென்னை, நவம்பர் 23, 2024: சென்னை, மடிப்பாக்கம் மாமன்னர் மருது பாண்டியர் மாளிகையில் அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதிக மதிப்பெண் பெற்ற 275 மாணவ, மாணவி களை ஊக்குவிக்கும் வகையில் க ல்வி ஊக்கத் தொகை வழங்கபட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் தலைவர் ஜி.இராவணன் , எஸ் .ராஜரத்தினம் ஐஏஎஸ் (ஓய்வு), எஸ். வனிதா ஐபிஎஸ் (ஓய்வு), பி.செந்தில் வேலன் ஐ ஆர் எஸ் உறுப்பினர்/வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். Press meet Youtube Video 👇 மேலும் குரூப் 4, ஆர் ஆர் பி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர், அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையினை வழங்கினர்.. நிகழ்ச்சியில் தலைவர் ஜி. இராவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த சங்கமானது1958 ஆம் ஆண்டுதுவக்கப்பட்டு அது முதல் சமுக குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம் அதன் மூலம் சமுக குழந்தைகள்...