Forum of Civil Pensioners Associations | மத்திய அரசு-BSNL ஓய்வூதியர்களின் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிர போராட்டம்

சென்னை, 23.09.2025 : மத்திய அரசு - BSNL ஓய்வூதியர்கள், தங்களது முக்கியமான இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மாநில குடிமைப் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று காலை 11.00 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. பிரதான கோரிக்கைகள்: 1. Validation of Pension Rules எனும் பிரிவை கொண்டுள்ள 2025 நிதி சட்டத்தின் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இந்த விதிகள் ஓய்வூதியருக்கான சமநிலையை பாதிப்பவை என்றும், ஓய்வூதியர்களை ஓய்வு பெற்ற தேதியி.ன் அடிப்படையில் பாகுபடுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது. 2. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த 8வது ஊதியக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு அமைக்கப்படும் நடவடிக்கையில் மந்தமான செயற்பாடு இருப்பதாகவும், இது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்மானத்தையும் புறக்கணிக்கிறது என்றும் கூறப்பட்டது. Press meet Youtube Video link 👇 Forum of Civil Pensioners Associations சார்பில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிலைகளில் போரா...