Posts

Showing posts from August 31, 2021

சோளிங்கர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர். ஜவஹர் காங்கிரஸில் இணைந்தார் || சிறப்பு பேட்டி

Image
சென்னை, ஆகஸ்ட் 31, 2021: சோளிங்கர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திரு. ஆர். ஜவஹர் அவரது   ஆதரவாளர்கள் 500 பேருடனும் மற்றும் ஏராளமான கிறிஸ்துவ அமைப்புகளை சார்ந்த   பாஸ்டர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள்   தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணியளவில்   சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக்   கொண்டனர் . Video👇👇 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ்   பொதுச்செயலாளர் திரு. கே. சிரஞ்சீவி அவர்கள் செய்தார்.  இந்நிகழ்வில், தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள்,   மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின்   தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்றார்கள். ****

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவசேனா தமிழ்நாடு மாநில தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் அவசர பத்திரிகையாளர்கள் சந்திப்பு

Image
சென்னை, ஆகஸ்ட் 30, 2021: இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி சார்பில் மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அவருடன் முதன்மை செயலாளர் பாலாஜி ராமன், வடசென்னை மாவட்ட செயல் தலைவர் ரூபன் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Video👇👇 சென்னை புளியந்தோப்பு பகுதியில் சிவசேனா கட்சி சார்பில் பல கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சிவசேனா கட்சியின்  மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் திமுக ஆட்சியில் முதல் 100 நாள்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருப்பதை சிவசேனா கட்சி பாராட்டுகிறது என்று கூறினார். இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக செயல்படுகிறது கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்கவும் கோவில் சொத்துக்களில் வியாபாரங்களை முறையை படுத்துவதிலும் கோவில் பணிக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்களை நியமன படுத்துவதிலும் அறநிலைய ஆட்சித்துறை பாராட்டத்தக்க வகையில்  பணி செய்து வருகிறது என்று பாராட்டினார். கொரோனா கட்டுப்பாடுகளை கடை பிடித்து சிவசேனா கட்சி சார்பில் தமிழகத்...