IT & PG Hostel விடுதி உரிமையாளர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சனைகள் கிராமபுற ஏழை மகளிர் வேலை வாய்ப்பை பறிக்க வாய்ப்பு
சென்னை, ஜூலை 01, 2024: விடுதி உரிமையாளர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சனைகளை குறித்து தமிழ்நாடு IT விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் A.Seetharaman இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் ----------------------------------------------------- Press meet Youtube Video link :👇 ----------------------------------------------------- அப்போது அவர் பேசியதாவது: விடுதி உரிமையாளர்களின் உழைப்பையும், தியாகத்தையும், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கினையும், கருத்தில் கொண்டு GST வரியிலிருந்து விடுதிகளுக்கு விளக்கு அளித்த மத்திய அரசிற்கும் மற்றும் மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி. விடுதிகள் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை எளிமைபடுத்தப்படும் என்று அறிவித்து உள்ள தமிழக அரசிற்கும், முதல்வர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி. Tamil Nadu Government Gazette Feb-4-2019 அறிக்கையில் விடுதிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டிடங்கள் குடியிருப்பு Zoning Regulations Rule 33, Tamil Nadu Combine...