தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவழங்கிட முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை
சென்னை, ஜூலை 12, 2021: தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவழங்கிட முதல்வருக்கு சங்கத்தின் கோரிக்கை சார்பாக மாநில தலைவர் க.இராஜா தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் மாநில பொது செயலாளர் மு.பழனி, மாநில பொருளாளர் சி.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். Video👇👇 அப்போது க.இராஜா கூறியதாவது, கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் ஒரு நாட்டின் வளர்ச்சி முழுமையடைந்ததாக கருதப்படும் என்ற லட்சிய கோட்பாட்டை மனதில் கொண்டு அந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ''மக்கள் நலப்பணியாளர்கள்'' என்ற பணியிடத்தை எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்து இருக்கிற எங்கள் நெஞ்சமெல்லாமல் நிறைந்துள்ள அன்புத்தலைவர் முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள் . அதன் காரணமாகவே ஜெயலலிதா ஆட்சியில் மூன்று முறை தொடர்ந்து பழிவாங்கப்பட்டோம். இளமை வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றோம். 2014-ம் ஆண்டு பணி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு. சத்யநாராயணன், திரு. பால்வசந்தகுமார் அவர்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்...