KRT Career அகாடமியின் TNPSC இலவச வகுப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
27.02.2022: சென்னை ஜாபர்கான்பேட்டையில் செயல்பட்டுவரும் ஓ.பி.ஆர் நினைவுத் தொண்டு அறக்கட்டளையின் ஓர் அங்கமான KRT கேரியர் அகாடமியின் சார்பில் TNPSC தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. வீ.செல்வராஜூ அவர்கள் தலைமை தாங்கினார் . Youtube Video👇👇 தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2022ம் ஆம் ஆண்டிற்கான உத்தேச ஆண்டுத்திட்ட நிரலின் அடிப்படையில் குரூப் II, IIA & IV பணியிடங்களுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் ஓ.பி.ஆர். நினைவுத்தொண்டு அறக்கட்டளையின் கீழ் செயல்படும் KRT கேரியர் அகாடமியில் 27.02.2022 முதல் இலவசமாக நடத்தப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, பேதம் பார்க்காமல் முன்னாள் முதன் முதல் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஊழலற்ற, திறமையான நிர்வாகிகளை கொண்டு தமிழகத்தை உருவா...