பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியிட்டு விழா

சென்னை: நவம்பர் 14 சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களுக்காக, எழுதிய 14 கதை தொகுப்புகள், பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தாரால் நவம்பர்16 ம் தேதி சக்தி குழுமத்தின் சங்கமத்தில் வெளியிடப்பட்டது. "மைத்ரிம் பஜத ".. உலக ஒற்றுமைக்காக எழுதிய இறை வணக்க பாடலை இறை வணக்க பாடலை சக்தி குடும்பத்தின் தலைவர் உமா வெங்கட் மற்றும் சீதா கணேசன் பாடி நிகழ்ச்சியை இனிதே துவங்கி வைத்தனர். பிறகு திருமதி. சீதா கணேசன், தனது அறிமுக உரையில், பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் சமூக நலத்திட்டங்கள் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் குறிப்பிட்டு பேசினார். பேக்கிடேர்ம் டேல்ஸ் இயக்குனர் உமா அபர்ணா தலைமை தாங்கிய திருமதி பாமதி IAS, திருமதி வேதா கோபாலன் எழுத்தாளர், திருமதி. ஜெயந்தி நாகராஜன் ஆகியோர் எழுத்தின் வலிமையை உணர்த்தியது மட்டுமின்றி, வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தி பேசினார்கள். ஊன்று கோல் தேவைப்படுமா என்று எழுத்தாளர்கள் எனும் காலத்தில், அவர்களுக்கு எழுதுகோல் கொடுத்து ஊக்குவித்த பேக்கிடெர்ம் நிலைய நிறுவனர் செல்வி லட்சுமி பிரியாவின் முயற்சி, இமாலய வெற்றி என்றும் குறிப்...