தேச நலன் காக்க சென்னை பிருங்கிமலையில் சிறப்பு திருவிளக்கு பூஜை வீதி உலா

சென்னை பிருங்கிமலை சுற்றிலும் அமைந்துள்ள கோவில்களில் பிருங்கிமலை பிருங்கி மகரிஷி ஆலய திருப்பணி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சென்னையில் ஓர் கிரிவலம் பிருங்கி மகரிஷி உத்தரவால் தொடர்ந்து நடத்த கட்டளைபெற்று பிருங்கிமலை ஓம் ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள் தலைமையில் அனைத்து சிவனடியார்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. பிருங்கிமலை ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள் கடந்த மாதம் 15.05.2022 அன்று சென்னை பிருங்கிமலை அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் முற்றோதல், அன்னதானம் மற்றும் நடராஜர் உற்ச்சவர் வீதி உலா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாதம் அதேபோன்று சென்னை பிருங்கிமலையில் பிருங்கிமலை பிருங்கி மகரிஷி ஆலய திருப்பணி அறக்கட்டளை சார்பில் பிருங்கி மகரிஷி உத்தரவுப்படி பிருங்கிமலை ஓம் ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள் தலைமையில் வருகின்ற பௌர்ணமி 14.06.22 அன்று மதியம் 2:30 மணியளவில் சென்னை பிருங்கிமலை மாங்காளி அம்மன் கோவிலில் தேச நலன் காக்க சிறப்பு முற்றோதல், 1000 பேருக்கு திருவாசகம் ருத்திராட்சை மற்றும் அன்னதானம் வழங்குதலும் இறுதியில் தி...