மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காம் (𝘔𝘢𝘥𝘳𝘢𝘴 𝘊𝘪𝘵𝘺 𝘗𝘳𝘰𝘱𝘦𝘳𝘵𝘪𝘦𝘴. 𝘊𝘰𝘮) நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது

சென்னை: மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காம் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னேறு தமிழா பாடல் வெளியீட்டு விழா, சாருகேசி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்தியன் ஃபேமிலி கிளப் மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் உடன் இணைந்து 2025 ஆம் ஆண்டிற்கான முன்னேறு தமிழா சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா சென்னை மதுரவாயிலில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. Programme Youtube Video link 👇 மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில், வி ஐ டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான நடிகர் பார்த்திபன் , திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பெயரா அமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர்...