தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் மீது பரவும் போலியான தகவலை தடுக்க கோரிக்கை
சென்னை, மார்ச் 13, 2023: தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் மீது சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள பரவி வரும் நிலையில் சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதற்கான விளக்கம் அளித்தார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். Press meet video link 👇👇 அப்போது அவர் கூறியதாவது, நான் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவராக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்களின் இச்சங்கமானது கடந்த 13 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு அரசுக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாகவே திகழ்கிறது. மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் தொழிலாளர்களுக்கான அரசு சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிடுவதற்காகவே தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல சங்கத்தின் சார்பாக "Labour Talk" என்னும் மாதம் இரு முறை இதழினை தொடங்கி தொழிலாளர்களின் குரலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் பெயரைக் ...