Posts

Showing posts from January 2, 2021

வைகோ பேட்டி: திமுக கூட்டணியில் மதிமுக தனி சின்னத்தில் போட்டி - மக்கள் நலக்கூட்டணி உருவாகாது

Image
சென்னை 01, ஜனவரி 2020: திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார் வைகோ. கூட்டணி கட்சியினரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணத்திற்கு செக் வைக்கும் வகையில் பேசியுள்ளார் வைகோ Video Link 👇 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரும் சட்டசபைத் திமுக கூட்டணியில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தார். ரஜினி கட்சி தொடங்குவதற்கு தொடங்குவது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கூற முடியாது. 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்றும் வைகோ கூறினார். நடிகர் ரஜினிகாந்தை காயப்படுத்தும் வகையில் யார் மீம்ஸ் போட வேண்டாம் என்றும். நடிகர் ரஜின...