Udhayanidhi Stalin Distributes Covid Relief to Journalists
சென்னை, ஜூன் 1, 2021: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் , தனி மனித இடைவெளி, கட்டாய முகக்கவசம் என பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து மிக எளிய முறையில் இன்று 01-06-2021 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் மற்றும் பாதுகாப்புப் பொருட்களை வழங்கினார். நன்கொடையாளர்கள் திரு.த.மணிவண்ணன் மற்றும் யூத்திங்க் திரு.அப்துல்கனிஆகியோர் உடன் பங்கேற்கின்றனர். Video 👇👇 கோயம்பேடு வணிகரும் தமிழ்ப் பற்றாளருமான த.மணிவண்ணன் தனது தந்தையின் பெயரால் நடத்தப்படும் ‘தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை’ மூலம் 5 கிலோஅரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ கோதுமை, 1 கிலோ ரவை, 1 கிலோ மைதா, 1 கிலோ சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்ட 250 எண்ணிக்கையிலான தொகுப்பு வழங்கப்பட்டது. லோகா பவுண்டேஷன் சார்பில் யூத்திங்க் அமைப்பு 1000 எண்ணிக்கையில் 1 நீராவி பிடிக்க உதவும் கருவி, முகக்கவசம், மல்ட்டி விட்டமின் மாத்திரைகளின் தொகுப்பு, கபசுர குடிநீர், கிருமி நாசினி ...