M-Sand உற்பத்தியில் லஞ்ச முறைகேடு: Tamilnadu M-Sand Lorry Owners Welfare Association புகார்

சென்னை, ஆகஸ்ட் 26, 2021: Tamilnadu M-Sand Lorry Owners Welfare Association தலைவர் S.யுவராஜ் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது . அவருடன் செயலாளர் SKN.ஏகாம்பரம், பொருளாளர் S.மனோஜ், துணை தலைவர்கள் U.அல்ஹா பாஷா, R.குருமூர்த்தி, துணைச்செயலாளர்கள் S.எல்லப்பன், V.நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது ஒரு வார காலமாக கட்டுமானப்பணிகள் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் ஆதாரபூர்வமாக வெளிவந்தவண்ணம் உள்ளது. உதாரணமாக புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், சென்னை- ராமாபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், பெரம்பலூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், மேலும் K.K.நகர், ராமாபுரம் மற்றும் அரசு ஊழியர் குடியிருப்புகள் போன்றவற்றில், விரலால் அழுத்தினாலே சுவர்கள் கொட்டுகின்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோம். இதற்கு முக்கிய காரணமே தரமற்ற M.சாண்ட் என நிரூபிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணல் கிடைக்காத நிலையில், அரசு M.சாண்ட்டை உபயோகித்து கட்டுமானப் பணிகளைச் செய்யலாம் என பரிந்துரைத்தது. அதன்படி தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் அன...