Posts

Showing posts from February 20, 2023

சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் மற்றும் கன்னியம்மன் கோயில் நிலம் மீட்க கோரி மனு அளிப்பு

Image
20.02.2022: சென்னை நுங்கம்பாக்கம் கன்னியம்மன் கோயில் மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் நிலம் மீட்பு விவகாரமாக இந்து தமிழர் பேரவை நிறுவனர் சிவனடியார் பிருங்கிமலை கோபால் இன்று சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களை சந்தித்து மனு அளித்தார். அப்போது பத்திரிகை நிருபர்கள் பேட்டியில் அவர் ஆக்கிரமிப்பட்ட நிலங்கள் மீட்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாக கூறினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறினார். ****

மாமனிதன் விருதுகள் 2022- தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் துவக்கம்

Image
சென்னை: மாமனிதன் விருதுகள் 2022 பிரம்மாண்ட தொடக்க விழா   தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின்   நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும்   PRIME INDIAN மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கண்ணன்   மற்றும் F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு   காவல் ஆய்வாளர் க.சேட்டு அவர்கள் முன்னிலையில் இன்று தொடங்கப்பட்டது. Video Link👇👇 இதன் முதல் கட்டமாக வாக்கு பெட்டி வைக்கப்பட்ட வாகனம் கொடி அசைத்து இனிதே துவங்கப்பட்டது.  பொது மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக இந்த வாகனம் முக்கிய நகரங்களுக்கு செல்லும். மேலும் மக்கள் நேரடியாகவும், இணையதள மூலமாகவும் வாக்குகளை செலுத்தலாம். (L to R) தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார்;  பாலகிருஷ்ணன் PRIME INDIAN மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கண்ணன் அடுத்த 20 நாட்களில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் சேகரிக்கப்பட்ட நிலையில் விருது வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டு மாமனிதன் விருதுகள் 2022 வழங்கப்படும். மாமனிதன் விருதுகள் 2022 ...