வடபழனி டாக்டர் காமராஜ் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் நலம் மற்றும் ஸ்டெம் செல் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்கம்

சென்னை, செபசெப்டம்பர் 04, 2024: உலக பாலியல் நல தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பாலியல் நலம் மற்றும் ஸ்டெம் செல் விழிப்புணர்வு 5 நாட்கள் கண்காட்சியை வடபழனியில் டாக்டர் காமராஜ் மருத்துவமனை வளாகத்தில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். டாக்டர் டி. காமராஜ் மற்றும் டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இக்கண்காட்சியில் பாலியல் நலம், குழந்தையின்மை, பிரச்சனைகள், ஆண்மை குறைவு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியோடு ஸ்டெம் செல் விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெறுகிறது. ஸ்டெம் செல் பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது. Inauguration Youtube Video 👇 கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். கண்காட்சி நடைபெறும் நாட்களில் மருத்துவர்களை சந்தித்து பேசலாம். இலவச ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலியல் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பன்னாட்டு அளவிலான மருத்துவ கருத்தரங்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். மருத்துவ அறிவியலை, நவீன சிகிச்சை...