கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் சென்னை உலக சுற்றுலா வரலாற்றில் புதிய இலக்கை அடையும்: அமைச்சர் சாமிநாதன்

சென்னை, ஜனவரி 13, 2024 : நவீன தொழில்நுட்பத்துடன், தமிழ் மொழி, இலக்கியம், கலைகள், இசை மற்றும் நடன நிகழ்வுகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு அரசின் புதிய கலை, பண்பாட்டு திட்டங்கள் வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரவை கணிசமான அளவிற்கு அதிகரிக்கும், அந்நிய செலாவணியையும் பெரும் அளவிற்கு உயர்த்தும், என்று தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு M P சாமிநாதன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். (L to R) சிம்மம் குமார்; ஸ்ரீஹரன் பாலன்,SICCI; M P சாமிநாதன், தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்; ஆர். ரங்கராஜ், சென்னை ப்ளஸ் அறக்கட்டளை மற்றும் சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவர்; ரத்னவேல்ராஜன்,SICCI; எஸ். ராஜவேலு. கல்வெட்டு நிபுணர் முனைவர்; எம். சோமசுந்தரம், SICCI சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை, SICCI, சென்னை நிருபர்கள் சங்கம் ஆகியோர் இனைந்து வழங்கும் '' சென்னை 2056 காலாண்டு சுற்றுலா மற்றும் கலை விழா' வை துவக்கி, 'சென்னை 2056' இலச்சினை வெளியிட்டு, அமைச்சர் சாமிநாதன் தமி...