டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்

சென்னை: மருத்துவ உலகில் தினம் தினம் புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து, அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். மக்களில் சிலரும் நோய் பாதிப்புகளில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் இருந்து செயல்பட்டுவரும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் சென்டரும், அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சியில் புகழ் பெற்ற நிறுவனமான ஜியோஸ்டார் நிறுவனமும் இணைந்து ஸ்டெம் செல் சிகிச்சை முறையை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் டி.காமராஜ் கூறியதாவது: நோய்கள் மற்றும் உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டெம் செல்களை பயன்படுத்தும் ஒரு மருத்துவ முறை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகும். இந்த செல்கள் ரத்த அணுக்கள், மூளை செல்கள் மற்றும் தசை செல்கள் போன்ற உடலில் உள்ள பல்வேறு வகையான செல்களாக உருவாகும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன. நோயாளியின் உடலில் இந்த சிறப்பு செல்களை செலுத்துவதன் மூலம் சேதம் அடைந்த அல்லது நோயுற்ற திசுக்களை ஆரோக்கியமாக மாற்ற ...