6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் || ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வலியுறுத்தல்
ஜூலை 26, 2021: சென்னை T.நகர் தாமோதரன் தெருவில் உள்ள இந்து மக்கள் கட்சி சென்னை மாநகர தலைமையகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு பொதுச் செயலாளர் பாரதமாதா பா.செந்தில் தலைமையில் இன்று 11 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Video 👇👇 அப்போது அவர் கூறியதாவது: 1) ஜார்ஜ் பொன்னையாவை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் 2) கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமணைகளில் இலவசமாக்கு 3) ஆடிமாதம் அம்மன் கோயில்களில் கூழ்வார்க்கும் நிகழ்விற்கு இலவச தானியம் வழங்கிடு 4) இந்து மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கிடு 5) பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைத்திடு 6) மின்சார கட்டணம் உயர்வை திரும்ப பெறு தடையில்லா மின்சாரம் வழங்கிடு. ****