மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் நிறுவனத்தின் பதினாறாம் ஆண்டு விழா

சென்னை, ஜூன் 23, 2024: மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் நிறுவனத்தின் பதினாறாம் ஆண்டு விழா மற்றும் அதன் நிறுவனர் ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் நிறுவனத்தின் 5 புதிய வீட்டுமனை பிரிவுகளின் தொடக்க விழா சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்கத்தின் தேசிய தலைவர் ஹென்றி, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் மகாவீர் போத்ரா மற்றும் நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 500 பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியும் ஐந்து புதிய வீட்டுமனை பிரிவுகளை துவக்கி வைத்தும் சிறப்புரையாற்றினர்... ------------------...