Posts

Showing posts from June 15, 2022

பாரதிய ஜனதா கட்சியின் புல்டோஸர் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்டம்

Image
சென்னை, ஜுன் 15, 2022: பாரதிய ஜனதா கட்சியின் புல்டோஸர் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ம. முகமது கவுஸ் , ஒருங்கிணைப்பாளர், சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், ஆர்.கே.ஜலில் , ஒருங்கிணைப்பாளர், சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், சுப்பிரமணி ஆறுமுகம் , தேசிய பொது செயலாளர், வெல்ஃபேர் கட்சி, விக்ரமன் , மாநில செய்தி தொடர்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆலிம் அல்பஹாரி , சிறுபான்மை பிரிவு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பாலகிருஷ்ணன் , ஐக்கிய விவசாயிகள் முன்னனி மற்றும் லயோலா மணி , ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். Youtube Video👇👇 அப்போது அவர்கள் பேசியதாவது: வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்து 2014ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையை நோக்கியே பயணித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு, மதச்சுதந்திரம் பறிப்பு என பல்வேறு தளங்களில் இந்த...

கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க மும்முரம்

Image
டெல்லி: மம்தா பனர்ஜீயின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைப்பெற்றது . தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் மறுபடியும் நிற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.  இந்த முறை ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஆலோசனை தீவிரமாக நடைபெற்றது , இதில் மம்தா பானர்ஜி, சரத்பவார், மல்லிகா அர்ஜுன் கார்கே ஆகிய மூன்று பேர் கமிட்டி அமைக்க பட்டு எல்லா கட்சிகளும் ஏற்று கொள்ளக்கூடிய ஒரு பொதுவான ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்வு செய்ய சில நாட்களில் மூவரும் சேர்ந்து முடிவு செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. ****