அடுத்த குடியரசு தலைவர் யார்? தேர்வு முடிவாகிவிட்டதா?

விரைவில் நடைபெறப்போகும் குடியரசு தலைவர் தேர்தல் வரும் நிலையில் பலரது பெயர்களும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் இப்போது இது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. உலக நாடுகள் இந்தியாவில் மதசார்பின்மை இல்லை என குற்ற படுத்தும் நிலையில் இப்போது இதை பொய்மை படுத்தும் விதமாகவும் இந்தியாவில் ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பத்து இந்து மதத்தை சேர்ந்த ஜனாதிபதிகளும், மூன்று முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களும், ஒரு சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களும் இருந்து விட்டார்கள். ஆனால் இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் ஒரு கிறிஸ்தவர் கூட ஜனாதிபதியாக சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் குறையாக இருந்தது. இப்போது இதை நிறைவு செய்யும் பொருட்டாக எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவராகவும், உலகை பலமுறை சுற்றிவந்து மிகுந்த அனுபவமுடையவரும், இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவரும் அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் மைனாரிட்டியை சேர்ந்தவரும், கட்சி சார்பு அற்றவருமான ஒரு கிறிஸ்தவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் இதை ரகசியமாக வைத்துள்ளதாகவும் தெரிகிறது. ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந...