வரலாறு கண்டிராத மாபெரும் "𝘎𝘰 𝘎𝘭𝘰𝘣𝘢𝘭 𝘛𝘩𝘢𝘮𝘪𝘻𝘩𝘢" தொழில்-வணிக மாநாடு; 40 நாடுகள் - நகரங்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள்

சென்னை: ' தி ரைஸ்' என ஆங்கிலத்திலும் 'எழுமின்' என தமிழிலும் அறியப்படும் உலகத் தமிழர் தொழில் வணிக அமைப்பு வரலாறு கண்டிராத மாபெரும் "Go Global Thamizha" தொழில்-வணிக 14-வது மாநாடு சென்னை ஐ.டி.சி கிரான்ட் சோழா விடுதியில் ஜனவரி 9,10,11 நாட்களில் நடைபெறுகிறது . 40-க்கும் மேற்பட்ட நாடுகள். நகரங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேலான தமிழ்த் தொழிலதிபர்கள். வணிகர்கள், திறனாளர்கள் பங்கேற்கிறார்கள் என்று எழுமின் அமைப்பு (The Rise) நிறுவனர் Rev. Dr. ஜெகத் கஸ்பர் ராஜ் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த சந்திப்பில் மற்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர் இந்த சந்திப்பில் ஜெகத் கஸ்பர் ராஜ் மேலும் கூறியதாவது : 'தி ரைஸ்' என ஆங்கிலத்திலும் 'எழுமின்' என தமிழிலும் அறியப்படும் உலகத் தமிழர் தொழில் வணிக அமைப்பு 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் சீரிய வளர்ச்சி கண்டுள்ள இந்த அமைப்பிற்கு இப்போது 31 நாடுகளில் கிளைகள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டுமே 13 உலக மாநாடுகளை நடத்தி தமிழர்கள் தமக்கிடையே பல்லாயிரம் கோடி மதிப்பிலான தொழில் வணி...