தமிழ்நாட்டில் உள்ள அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டி கோரிக்கை : மாநில தலைவர் முத்துலட்சுமி பேட்டி
சென்னை, மே 05, 2021: தமிழ்நாடு அழகு நிலையங்கள் சார்பாக மாநில தலைவர் திருமதி முத்துலட்சுமி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அப்போது மாநில பொதுச் செயலாளர் வசந்தி சங்கர், இந்திய துணைத்தலைவர் அந்தோணி டேவிட், சென்னை தலைவர் அனு ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். Video 👇👇 கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளில் சலூன், அழகுநிலையங்கள் அடைக்கப்பட வேண்டும் என்ற அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. சென்ற ஆண்டில் கொரோனா முதற்கட்ட பரவல் ஊரடங்கில் எங்களுக்கு அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும், நிவாரணமும் கிடைக்கவில்லை. அந்த பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டு வர முடியாத இந்த சூழ்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ள அழகுக்கலை நிலையங்கள் அடைப்பு எங்களுக்கு பேரதிர்ச்சியையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. (L to R) மாநில பொதுச் செயலாளர் வசந்தி சங்கர்; மாநில தலைவர் முத்துலட்சுமி; இந்திய துணைத்தலைவர் அந்தோணி ட...