தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க புதிய திராவிட கழகம் கோரிக்கை
சென்னை, ஏப்ரல் 09, 2022: தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதிய திராவிடக் கழகத்தின் நிறுவனத்தலைவர் கே.எஸ். ராஜ்கவுண்டர் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். YouTube video👇 அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தின் நல்லாட்சி வழங்கி வருகின்ற தமிழக மக்களின் காவலர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய மக்களின் சார்பாகவும். புதிய திராவிட கழகத்தின் சார்பாகவும் ஒரு பணிவான வேண்டுகோள். தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் கல்வி. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். மேலும், 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்து ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய மக்கள் சார்பாகவும். புதிய திராவிடக் கழகம் சார்பாகவும் மற்றும் 107 சமுதாய...