தமிழ்நாடு & பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை

பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை, 6 ஐனவரி, 2021: தமிழ்நாடு நுகர்வோர் நலன் கருதி நுகர்வோர் இயக்கங்களின் சார்பில் தமிழ்நாடு & பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, பெட்காட் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராட்ச்சி மையம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தமிழ்க அரசுக்கு கோரிக்கை . நுகர்வோர் தொடர்பான வழக்குகளுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 1987-ல் நீதித்துறையின் கீழுள்ள வழக்கமான கோர்ட்டுகளோடு இணைக்கப்படாமல் தனியாக நுகர்வோர் கோர்ட்டுகள் துவக்கப்பட்டன. நுகர்வோர் குறைதீர் மன்றம் (கோர்ட்,) நுகர்வோர் ஆணையம் என அந்தஸ்து உயர்த்தியுள்ள நிலையில் தலைவராக மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் அரசால் நியமிக்கப்படுகின்றனர். நுகர்வோரது பிரச்னையாக இருப்பதால் உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் கீழ் இவ் ஆணையங்கள் செயல்படுகிறது. மாநில அளவிலான நுகர்வோர் ஆணையம் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன. இதேபோல் 32 மாவட்டத்திற்கு நுகர்வோர் குறைதீர் மன்றமும் உள்ளன. 6-புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட...