வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுறுவசிலை: வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் தமிழக அரசுக்கு நன்றி
சென்னை, செப்டம்பர் 08, 2021: நீண்ட வருட கோரிக்கையான சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டியகட்டபொம்மனின் திருவுருவசிலையை சென்னை கிண்டியிலுள்ள (காந்தி மண்டபத்தில்) அமைக்க அறிவித்த மாண்புமிகு மக்களின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் Dr.L.துளசிராமன் D.C.E., B.A., B.L தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
Youtube Video👇👇
அப்போது அவர் பேசியதாவது:
எங்களின் நீண்ட வருட கோரிக்கையான, வெள்ளையனை முதன் முதலில் எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று திமுக-வின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து எங்கள் நீண்ட நாளான கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கேட்டு கொண்டதற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிக்கை எண் : 455-வது வரிசையில், சென்னையில் வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலை நிறுவப்படும், என்று அறிவித்தார்.
இவ்வறிப்பை சட்டமன்ற பேரவையில் 07.09.2021 அன்று சென்னை கிண்டியில் காந்திமண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இதற்காக உறுதுணையாக இருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி MLA திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிறுவனத் தலைவர்
Dr.L.துளசிராமன் D.C.E., B.A., B.L.,
என்கிற
இளைய கட்டபொம்மன்
****