தமிழ்நாடு அரசு கிராம மேல்நிலை நீரத்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களின் கோரிக்கைகள்
சென்னை, அக்டோபர் 26, 2021: தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிர்தேக்கதொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் சென்னை எழிலகம் பின்புறம் நடைபெற்றது. அதன் பிறகு மாநில கூட்டமைப்புத் தலைவர் M.செல்வம் அவர்கள் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் துணைத்தலைவர்கள் K.G.ராஜேந்திரன் (தர்மபுரி), D.சாமிதுரை (கடலூர்) மேலும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Youtube Video👇👇 அப்போது அவர் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பற்றி கூறினார். 1) தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 10, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குவோர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 153 வது பத்தியின்படி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்துதல்; 2) கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க கூடுதல் தொட்டி இயக்குவோர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க வலியுறுத்தல்; 3) கிராம ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித...