தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்திட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்
சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குறுதியில் பட்டியலிட சுதந்திர வாடகை வாகன சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் - மதிப்பிற்குரிய ஐயா/அம்மா: தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்களும் தொழில் செய்து வருகிறோம். Video👇 தமிழக வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பலகோடி இன்னல் களை கீழ்க்கண்ட அட்டவணை, வரும் சட்டமன்ற தேர்தல் 2021ல் தேர்தலுக்கான வாக்குறுதி அளிப்பதோடு தங்களது அரசு நிறுவும் பட்சத்தில் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆட்டோ பிரிவு : *ஆட்டோ தொழிலாளர்களுக்கு மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் திரையரங்குகளில், சுற்றுலாத்தலங்கள், விமான நிலையம், ரயில் நிலையம்,பேருந்து நிலையம்,மற்றும் வழிபாட்டு தலங்களில்மக்களிடம் நேரடியாக வணிகம் செய்யும் வகையில் பிற மாநிலங்களில் குறிப்பாக புதுடெல்லி மும்பை போன்று வாகன நிறுத்துமிடம் உருவாக்கிமக்களை வாகனங்களில் ஏற்றுவதற்கும் பயணிகளுக்கு இறங்குவதற்கும் வழிவகை செய்து தரவேண்டும். *பெண் ஆட்டோ, கார் ஓட்டுநர்தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 32 வயதிற்கு மேற்பட்டவர்களே இப்பணி...