பட்டியலின பழங்குடியின துணைத்திட்டத்தை தனி சட்டமாக அரசு இயற்றவேண்டும்: விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
சென்னை, செப்டம்பர் 6, 2021: விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் இன்று 2021- 2022 தமிழக அரசின் ஆதிதிராவிடர் நிதிநிலை அறிக்கை பற்றி பத்திரிகையாளர்களை சந்தித்தார். Youtube Video 👇👇 அரசின் ஆதிதிராவிடர்களுக்கான வரவு செலவுத் திட்டம் என்பது பொருளாதார அரசியல் மேதைகள் மட்டுமே மேலிருந்து முடிவு செய்யப்படுவது அல்ல. வெகுஜன மக்களின், அதாவது பயனாளிகளின் கோரிக்கைகள் விருப்பங்கள் அவர்களின் சூழல்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு இயற்றப்படுவது சிறந்த வரவு செலவுத் திட்டமாக இருக்கமுடியும். அந்த அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி அது எப்படி ஆதிதிராவிடர் வகுப்பினர்களுக்கு சென்று சேர்வதில்லை. அந்த நடைமுறையை எப்படி மாற்றவேண்டும், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும், மேலும் என்னென்ன திட்டங்களுக்கு செலவிட்டால் ஆதிதிராவிட மக்களின் நிலை முன்னேறும் என்ற அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்து இருப்பதாக கூறினார். இச்சந்திப்பில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும், மிடில்பாத் டிரஸ்ட...