Posts

Showing posts from September 30, 2021

இரண்டு வருட பட்டப்படிப்பு படித்த ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு

Image
சென்னை, செப்டம்பர் 30, 2021: அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வக நுட்புனர் நிலை2 பணியிடங்களை அதிக அளவில் உருவாக்கி சமச்சீர் கல்விக்குமுன் படித்தவர்களை பாதிக்காத வகையில் நிரப்பிட தமிழக அரசிடம் மனு கொடுத்தல் சம்பந்தமாக இன்று இரண்டு வருட பட்டய ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தின் (Two Years Diploma Lab Technicians Association)  சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. YouTube Video👇👇 இந்த சந்திப்பில் மாநில தலைவர் R.ஜெயபாரதி, மாநில துணைத்தலைவர் L.தாஷாயணி மற்றும் மாநில செயலாளர் R.ஜஸ்டின் ராஜ் கலந்து கொண்டனர். (L to R)  மாநில செயலாளர் R.ஜஸ்டின் ராஜ்;  மாநில தலைவர் R.ஜெயபாரதி; மாநில துணைத்தலைவர் L.தாஷாயணி அப்போது அவர்கள் பேசியதாவது: 1)நாங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்புனர் (DMLT) இரண்டு வருட பட்டயப்படிப்பு படித்துவிட்டு 15 வருடங்களுக்கு மேலாக அரசு பணியில் முன்னுரிமை இல்லாமலும் வேலை வாய்ப்பு இல்லாமலும் எங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம். 2) தமிழகம் முழுவதும் சுமார் 20000 பேர் ஆய்வக நுட்புனர் பட்டயப்படிப்பு (DMLT) முடித்துவி...

உத்திர பிரதேசத்தில் மௌலானா கலீம் சித்தீகை உ.பி. யோகி அரசு கைது செய்தததை கண்டித்து இமாம்ஸ் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

Image
சென்னை, செப்டம்பர் 30, 2021: புகழ் பெற்ற மௌலானா கலீம் சித்தீக்கி அவர்கள் கைது அரசியல் சாசன உரிமையைப் பறித்த யோகி அரசை கண்டித்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஷம்சுல் இக்பால் தாவூதி தலைமையில்   இன்று காலை 11 மணியளவில்அண்ணா சாலையில் மக்கா மஸ்ஜித் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Youtube Video👇👇 ஆர்ப்பாட்டத்திற்கு இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் கே.அர்ஷத் அஹ்மது அல்தாஃபி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார். இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில தலைவர் ஷம்சுல் இக்பால் தாவூதி, எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் நாகூர் மீரான், மன்னடி செம்புதாஸ் பள்ளி இமாம் ராஜிக் பாகவி ஆகியோர் உ.பி அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். அப்போது அவர்கள் பேசியதாவது: ஃபாசிச பா.ஜ.க அரசு சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் சிந்தனையாளர்கள் என குறிவைத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் உத்தரப் பிரதேச மாநில அரசு மிகவும் மோசமான நிலையை வெளிக்காட்டு...