அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அங்கீகாரம் பெற்று விற்று வரும் மனைகளுக்கு ரெரா (RERA) விலக்கு கேட்டு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கம் (INRBDMA) சார்பில் கோரிக்கை
சென்னை, டிசம்பர் 29, 2021: அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அங்கீகாரம் பெற்று விற்று வரும் மனைகளுக்கு ரெரா (RERA) விலக்கு கேட்டு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கம் (INRBDMA) சார்பில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் சங்கத்தின் அகில இந்திய பொருளாளர் KVS சரவணன், மாநில தலைவர் கிள்ளிவளவன், மாநில செயலாளர் பாலமுருகன் மற்றும் மாநில துணைசெயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். Youtube video👇👇 அப்போது அவர்கள் பேசியதாவது; நாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றோம். இத்தொழிலில் பல பிரச்சனைகள் உள்ளன. அதில் எங்களிடம் உள்ள பிரச்சனைகளில் முக்கியமானது ரெரா (RERA) ஆகும். நாங்கள் அங்கீகாரம் இல்லாமல் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனைகளை மட்டும் விற்பனை செய்து வந்தோம். வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் போட்ட வழக்கால் கடந்த 2016-இல் அங்கீகாரம் இல்லாமல் மனை விற்பனை செய்ய கூடாது என கோர்ட் தடை ஆணை பிறப்பித்தது. (L to R) மாநில செயலாளர் பாலமுருகன்; மாநில தலைவர் கிள்ளிவளவன்; அகில இந்திய பொருளாளர் KVS சரவணன்; மாநில துணைசெயலாளர் ரா...