திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இரண்டு இளம் சிறுவர்கள் 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிவித்து அசிஸ்ட் உலக சாதனை முயற்சி
சென்னை, ஆகஸ்ட் 3, 2021: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இளம் சிறுவர்கள் ஆ. ஆபிராம் வோஸ் (வயது 10) 5-ம் வகுப்பு 1330 திருக்குறள் கூரிய நேரம் 33.08 நிமிடங்கள் ஆ.அருணிஷ். ஷேண்டோ 1330 திருக்குறள் கூரிய நேரம் 25.47 நிமிடங்கள் (வயது7) 2-ம் வகுப்பை , கண்டமங்களம் ஒன்றியம் நவமால் காப்பேரில் உள்ள அரசு தொடக்கவள்ளியில் படித்து வரும் இவர்கள் மனப்பாடமாக ஒப்பித்து கோரிக்கை வைக்கும் சாதனை நிகழ்த்தினர். Video👇👇 இவர்களது பெற்றோர் தந்தை R.ஆறுமுகம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கடலாடித்தாங்கல் சொந்த ஊராகும். தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித் தேர்விற்காக படித்து வருகிறார் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதிச் தேர்வில், இராண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது மனைவி A.சுசான்னா இல்டா, கண்டமங்களம் ஒன்றியம் V.பூதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இச்சிறுவர்களின் ஆற்றலை அறிந்து விஜிபி உலக தமிழ்ச் சங்கத்துடன் இனைந்து அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ஏற்பாட்டில் இச்சாதனை நிகழ்வு செய்யப்பட்டுளள்ளது. இந் நிகழ்வி...