"மலையகம் 200" - மாநாடும் ஓவியக்கண்காட்சியும் - 09.12.2023 - காலை 9.00 முதல் பி.ப.4.00 வரை - இலயோலா கல்லூரி, சென்னை
"மலையகம் 200" - மாநாடும் ஓவியக்கண்காட்சியும் - 09.12.2023 - காலை 9.00 முதல் பி.ப.4.00 வரை - இலயோலா கல்லூரியில் நடக்க இருப்பதாக Solidarity for Malayagam செயலாளர் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பி ஏ காதர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். Press meet youtube video👇 மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் இருந்து காலத்துக்குக் கால் ஏனைய நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் குடியேறிய நாடுகளின் பொருளாதார, சமூக, அரசியல் கலாச்சார மேம்பாட்டுக்கு மாத்திரமல்ல அவற்றின் தேசிய உருவாக்கத்துக்கும் பெரும் பங்களிப்பாற்றியுள்ளார்கள். இவர்களில் வெற்றி பெற்றவர்களைப்பற்றி மாத்திரமே உலகம் பேசுகிறது. இதற்கு முற்றிலும் வேறுபட்டவகையில் ஒரு மக்கள் கூட்டம் நவீன அடிமைகளாக பல நாடுகளுக்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் மலிவான கூலிகளாக ஏமாற்றி கொண்டு செல்லப்பட்ட இவர்களின் கடுமையான உழைப்பு வகித்த உன்னதமான பாத்திரத்தைப் பற்றியும், அவர்கள் அனுபவித்த துயரங்களைப் பற்றியும் உலகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அதைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. அவர்களுக்குரிய கௌரவ...