சென்னை, செப்டம்பர் 02, 2024: உலக பாலியல் நல தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ம்தேதி வரை பாலியல் நலம் மற்றும் ஸ்டெம் செல் விழிப்புணர்வு கண்காட்சி, வடபழனியில் டாக்டர் காமராஜ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருக்கிறது. டாக்டர் டி. காமராஜ் மற்றும் டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கண்காட்சி குறித்து விளக்கம் அளித்தனர். அவருடன் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கலந்து கொண்டு பாலியல் சர்வே முடிவுகளை வெளியிட்டார். அப்போது டாக்டர் டி. காமராஜ் கூறியதாவது: தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் 04.09.2024 அன்று காலை 10:30 மணி அளவில் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். பாலியல் நலம், குழந்தையின்மை, பிரச்சனைகள், ஆண்மை குறைவு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியோடு ஸ்டெம் செல் விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெறுகிறது. Press meet Youtube Video link 👇 கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். கண்காட்சி நடைபெறும் நாட்களில் மருத்துவர்களை சந்தித்து பேசலாம். இலவச ஆலோசனை வழங்கவும் ஏ...