தமிழக போக்குவரத்து துறையில் லஞ்சம் 30% ஆக உயர்ந்துள்ளதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
18.08.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள தமிழக முதல்வர் அவர்களின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் குறித்தும் மற்றும் 5 அம்ச கோரிக்கைகள் குறித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் சம்பந்தமாக இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் S.யுவராஜ், தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் காஞ்சி ச.தீனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். Youtube video👇👇 அப்போது அவர்கள் பேசியதாவது: தமிழக போக்குவரத்து துறையில் கடந்த ஆண்டுகளை விட 30% (முப்பது சதவீதம்) லஞ்ச லாவண்யம் உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கல்குவாரிகளும், செயற்கை மணல் (M.Sand) கிரஷர்களும், கிராவல் குவாரிகளும், சவுடுமண் குவாரிகளும், அரசு மணல் விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. மேற்படி குவாரிகளிலிருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான லாரிகளில் முற்றிலும் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் (Over Load) ஏற்றிச் செயல்கிறார்கள். குறிப்பாக சிறிய லாரிகள...