தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் குடியிருப்பு நிலங்களை உரிமையாக்கிட சட்டமியற்ற பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம்

சென்னை, 12.04.2025: தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் குடியிருப்பு நிலங்களை உரிமையாக்கிட சட்டமி ய ற்ற பத்து இலட்சம் கையெழுத்து இயக்கமும், மக்கள் தொகை அடிப்படையற்ற நாடாளுமன்ற தொகுதி சீரமைப்புக்கு விழிப்புணர்வு இயக்கமும் நடைபெறும் என்று தமிழக முன்னேற்ற முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். அவருடன் செயலாளர் வழக்கறிஞர் சோபன் பாபு, செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், மகளிர் அணித் தலைவர் திருமதி காஞ்சனா , ஜனநாயக மகளிர் கட்சித் தலைவர் திருமதி.அம்மு ஆறுமுகம், நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் நஞ்சுண்டேஸ்வரன். கள்ளிக்குப்பம் மக்கள் நலக் குழு பொறுப்பாளர்கள் ஜெயுமுருகன், ஆறுமுகம்,ரமேஸ் கலந்து கொண்டனர். மேலும் அவர் கூறுகையில்: 1. நகரமயமாக்கல், நீர்நிலை தன்மை மாறிய நிலையில் அல்லது நோக்கமற்று வறண்டு போனபோதெல்லாம் நிலமற்ற ஏழை மக்கள் அதை ஆக்கிரமித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் சில சமயங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை மக்கள் ஆக்கிரமித்திருப்பதும் உங்களுக்குத் தெரிய...