சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டியார் சகோதரர்களுக்கு சிலை நிறுவிய புல்லட் டி.ஜி. சுரேஷ் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டு விழா – சென்னையில் சிறப்பாக நடைபெற்றது

சென்னை, செப்டம்பர் 28, 2025: ஆந்திர மாநிலம் சித்தூரில் தமிழ் வரலாற்றின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், மாமன்னர் மருதுபாண்டியார் சகோதரர்களுக்கு சிலை நிறுவிய ஆந்திர மாநில முதலியார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய தலைவருமான புல்லட் டி.ஜி. சுரேஷ் அவர்களின் அருமையான பணியை பாராட்டும் விதமாக, ஒரு சிறப்புப் பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அதன் சார்புடைய அறக்கட்டளைகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர், வாக்ஸ் குழுமத் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் அவர்கள் தலைமையேற்க, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பூட்டினார்கள். Event Highlights Youtube Video link 👇 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இரா.கற்பூரப்பாண்டியன், கே.கணேசன், எஸ். இராஜரெத்தினம், முன்னாள் ஜ.பி.எஸ் அதிகாரி எஸ்.வனிதா, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்...